Wednesday 16 April 2014

காத்திருக்கும் காதல்

நான் எழுதிய கவிதைகள்
அவளுக்காக,
நான் வரைந்த ஓவியங்கள்
அவளுக்காக,

அவள் காதலை மறைக்கிறாள்
தன் குடும்பத்திற்காக.
நான் என்றென்றும் காத்திருப்பேன்
அவள் சம்மதத்திற்காக.

காதல் முகம்

இதழ்களும் கண்ணங்களும்

காதல் செய்கிறதோ !


இதழ் விரித்து சிரிக்கும் பொழுது


கண்ணங்களும் விரிகிறதே !

Monday 14 April 2014

காதல் மலர்கின்ற பருவம்

காதல் மலர்கின்ற பருவம் இது.

செவிகள் இரண்டில் இன்னிசை கேட்கும்
விழிகள் இரண்டும் மின்னலாக மின்னும்
கைகள் இரண்டும் இறகாக மாறும்
கால்கள் இரண்டும் தரையில் தாளம் போடும்

ஆனால் இதயம் என்பது ஒன்று தான்,
அதன் இருப்பிடம் அவளுக்கு மட்டும் தான். 

நெஞ்சம் மறப்பதில்லை

அவளை நெருங்க நெருங்க,
என்னை நானே விலகிப் போகிறேன்

அவளை நினைக்க நினைக்க,
எனனை நானே மறந்து போகிறேன்

அவள் என்னை திரும்பி பார்க்க,
அன்றாடம் அவள் பின்னே செல்கிறேன்.

அவள் என்னை விரும்பி பார்க்க,
நல்லவன் போல நாடகம் போடுகிறேன்

அவள் என்னுடன் பேசி விட்டால்,
எனக்குள் நானே பேசிக் கொள்கிறேன்

அவள் என்னுடன் பேசா விட்டால்,
தாயுடன் பேசவும் மறந்து போகிறேன்

அவள் என்னை வெறுக்க வெறுக்க,
அவளை மட்டுமே அதிகமாக நேசிக்கிறேன்

அவள் என்னை மறந்து போக,,
இன்னமும் அவளையே நினைத்து வாழ்கிறேன்.


அவளை மறப்பதை விட உயிர் துறப்பதே மேல்!!!

Saturday 12 April 2014

காதலும் கற்றுமற

விரல்களின் நுனியில் நகத்தை போல்

விழிகளின் நுனியில் ஈரத்தை போல்


காதலில் பட்டும் படாமல் இரு
ந்துவிடு.


அப்பொழுது தான்,

வெட்டி எறியும் விரல்களை போல


காய்ந்து போகும் ஈரத்தை போல


காதலும் ஓர் நாள் மறைந்து போகும்.

புன்னகைக் காதல்

இதழ்களும் கண்ணங்களும்

காதல் செய்கிறதோ?


இதழ் விரித்து சிரிக்கும் பொழுது


கண்ணங்களும் விரிகிறதே !

தமையனின் பிரிவு




தாய் தந்தையுடன் தூங்கிய நாட்களை விட

என் தமையனுடன் உறங்கிய நாட்களே அதிகம் !!!